Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வாஷிங்டன் மீது தாறுமாறாக பறந்த விமானம்
உலகச் செய்திகள்

வாஷிங்டன் மீது தாறுமாறாக பறந்த விமானம்

Share:

அமெரிக்காவில், டென்னசி மாகாணம் எலிசபெத்டானில் இருந்து புறப்பட்டு லாங் தீவின் மாக்ஆர்தர் விமான நிலையத்தை நோக்கி சென்ற விமானம், திடீரென தலைநகர் வாஷிங்டன் நோக்கி பறந்தது.

ரேடியோ சாதனம் மூலம் தொடர்பு கொண்டும் எந்த பதிலும் அளிக்கவில்லை. அமெரிக்க ராணுவம், போர் விமானத்தை கொண்டு, அந்த விமானத்தை மறித்து வழிக்கு கொண்டுவர முயன்ற போது, தாறுமாறாக பறந்த விமானம், விர்ஜினியா மாகாணம் மான்டேபெலோ அருகே மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. மீட்புப்படையினர் அந்த இடத்தை அடைவதற்கு 4 மணி நேரம் ஆன நிலையில், அவ்விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர், ஏன் கீழ்ப்படியாமல் சென்றது என்பது குறித்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News