Aug 13, 2026
Thisaigal NewsYouTube
ராஜஸ்தானில் ஆற்றில் மூழ்கி 8 பேர் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

ராஜஸ்தானில் ஆற்றில் மூழ்கி 8 பேர் உயிரிழப்பு

Share:

ஜெய்ப்பூர், ஜூன்.10-

ராஜஸ்தானில் ஆற்றில் மூழ்கி 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஜெய்ப்பூரைச் சேர்ந்த சிலர் சுற்றுலாவாக டோங்க் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அதில் 25 - 30 வயது மதிக்கத்தக்க 11 பேர், அங்குள்ள பனாஸ் ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில், அவர்கள் நீரில் மூழ்கினர்.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் அங்கு விரைந்து அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். அதில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் எப்படி ஆற்றில் மூழ்கினர் என தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

8 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள மாநில முதல்வர் பஜன்லால் சர்மா, அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Related News

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு