Oct 28, 2025
Thisaigal NewsYouTube
பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்காகத் தேடப்படும் 11 பயங்கரவாதிகள்
உலகச் செய்திகள்

பஹல்காம் வேட்டையின் அடுத்த இலக்காகத் தேடப்படும் 11 பயங்கரவாதிகள்

Share:

புது டெல்லி, மே.14-

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், மேலும் 11 பேர் யார் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளில் 3 பேரை பாதுகாப்புப் படையினர் அண்மையில் சுட்டுக் கொன்றனர். இந்தத் தாக்குதலை அரங்கேற்ற உள்ளூர் மக்கள் பலரும் உதவியிருக்கலாம், உள்ளூர் பயங்கரவாதிகளின் ஒத்துழைப்பின்றி எதுவும் நடந்திருக்காது என்று உறுதியுடன் நம்பும் இந்திய உளவுத்துறை மேலும் 11 பயங்கரவாதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த 11 பேரும் பஹஸ்காம் தாக்குதலில் தொடர்புடையவர்கள். அவர்கள் யார் என்ற பெயர் விவரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. 11 பயங்கரவாதிகளுக்கு வயது 20 முதல் 40 வயது வரை இருக்கும் என நம்பப்படுகிறது. பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு உதவி இருக்கின்றனர். ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது ஆகிய இயக்கங்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

11 பேரில் 3 பேர் ஹிஸ்புல் முஜாகிதீன், 5 பேர் லஷ்கர் இ தொய்பா, 3 பேர் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர்கள் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Related News

விமான நிலையத்தில் டிரம்ப் நடனம் ஆடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது

விமான நிலையத்தில் டிரம்ப் நடனம் ஆடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது

மலேசியா ஓர் அற்புதமான நாடு: டொனால்ட் டிரம்ப் பாராட்டு

மலேசியா ஓர் அற்புதமான நாடு: டொனால்ட் டிரம்ப் பாராட்டு

47-வது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு ஜப்பான் புறப்பட்டார் டொனால்ட் டிரம்ப்!

47-வது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு ஜப்பான் புறப்பட்டார் டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: 1,711 மலேசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு - MITI அறிவிப்பு!

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: 1,711 மலேசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு - MITI அறிவிப்பு!

"உலகளாவிய நிலைத்தன்மைக்குத் தூணாக இந்தியா-ஆசியான் கூட்டு": பிரதமர் மோடி பெருமிதம்!

"உலகளாவிய நிலைத்தன்மைக்குத் தூணாக இந்தியா-ஆசியான் கூட்டு": பிரதமர் மோடி பெருமிதம்!

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!