Jun 13, 2026
Thisaigal NewsYouTube
காங்கோவில் இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் 193 பேர் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

காங்கோவில் இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் 193 பேர் உயிரிழப்பு

Share:

கின்ஷாஷா, செப்டம்பர்.14-

வடமேற்கு காங்கோவில் நிகழ்ந்த இரண்டு தனித்தனி படகு விபத்துகளில் 193 பேர் பலியாயினர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், வடமேற்கில் உள்ள ஈக்வடார் என்ற மாகாணத்தில் படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 86 பேர் உயிரிழந்தனர். அதில் 60 க்கும் மேற்பட்டவர்கள் மாணவர்கள். இந்த படகு விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அதிகளவில் ஆட்களை ஏற்றிச் சென்றதும், இரவு நேரத்தில் பயணம் மேற்கொண்டதுமே காரணம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈக்வடேர் மாகாணத்தின் லுகோலேலா பிரதேசத்தில் உள்ள காங்கோ ஆற்றின் குறுக்கே 500 பயணிகளுடன் சென்ற ஒரு படகு தீப்பிடித்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 107 பேர் உயிரிழந்தனர். 209 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். வடமேற்கு காங்கோவில் இரண்டு படகு விபத்துகளில் 193 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் மாயம் ஆகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.

மத்திய ஆப்பிரிக்க நாட்டில் படகுகள் கவிழ்வது அடிக்கடி நடந்து வருகிறது. இது போன்ற பயணங்களில், லைப் ஜாக்கெட்டுகள் அரிதானவை. அதிக சுமையுடன் பல படகுகள் இரவில் பயணிக்கின்றன. விபத்துகளின் போது மீட்பு முயற்சிகளைச் சிக்கலாக்குகின்றன என மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related News

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!