புதுடெல்லி, ஜூலை.12-
கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் 260 பேர் கொல்லப்பட்டனர். அவ்விமானம் ஓடுபாதையிலிருந்து புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு எரிபொருளை எஞ்சின் இயந்திரத்துக்குள் செலுத்தும் செயல்பாடுகளை இயக்கும் முறை தொடர்பில் குழப்பம் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனால் எஞ்சின் இயந்திரங்களுக்கு எரிபொருள் சரியாகப் போகவில்லை. அதன் காரணமாக விமானிகள் இருக்கும் விமானப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.
விமான விபத்துகள் குறித்து விசாரணை நடத்தும் இந்திய அதிகாரிகள் அவ்விபத்து குறித்த அறிக்கையை இன்று சனிக்கிழமை வெளியிட்டனர்.
அகமதாபாத்திலிருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குப் போகவிருந்த அந்த போயிங் 787 டிரீம்லைனர் விமானம் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி விழுந்து நொறுங்கியது. அச்சம்பவம், உலகளவில் கடந்த 10 ஆண்டுகளில் காணப்படாத ஆக மோசமான விமான விபத்தாகும்.








