Jan 16, 2026
Thisaigal NewsYouTube
புறப்பட்ட விமானத்தில் இருந்து கழன்ற சக்கரம்... கார்களுக்குச் சேதம்!
உலகச் செய்திகள்

புறப்பட்ட விமானத்தில் இருந்து கழன்ற சக்கரம்... கார்களுக்குச் சேதம்!

Share:

அமெரிக்கா, மார்ச் 8 -

ஜப்பானுக்குச் செல்லவிருந்த United Airlines விமானம் சக்கரம் கழன்றதால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.சம்பவம் நேற்று நேர்ந்தது.

சான் பிரான்சிஸ்கோஅனைத்துலக விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நொடிகளில் சக்கரம் கழன்றதைக் காட்டும் காணொளி இணையத்தில் பதிவுசெய்யப்பட்டது.சக்கரம் விமான நிலைய ஊழியர்கள் பயன்படுத்தும் கார் நிறுத்தும் இடத்தில் விழுந்தது.

அதனால் அங்கிருந்த பல கார்கள் சேதமடைந்ததாக உள்ளூர் ஊடக நிறுவனமான KRON4 தெரிவித்தது.லாஸ் ஏஞ்சலிஸ் அனைத்துலக விமான நிலையத்திற்கு வெளியே தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.Boeing 777 ரக விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.பின்னர் அது இழுத்துச் செல்லப்பட்டது.

விமானத்தில் 235 பயணிகளும் 14 சிப்பந்திகளும் இருந்தனர்.அந்த விமானம் 2002ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது.சக்கரம் சேதமடைந்தாலோ இல்லாமல் போனாலோ பாதுகாப்பாகத் தரையிறங்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளதாக United Airlines நிறுவனம் சொன்னது.விமானத்தில் இருந்தோர் வேறொரு விமானத்திற்கு மாற்றிவிடப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டது.

Related News