Jun 18, 2026
Thisaigal NewsYouTube
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர்! தேர்தல் பிரச்சாத்திற்கு ஆடம்பர பேக்!
உலகச் செய்திகள்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து பிரதமர்! தேர்தல் பிரச்சாத்திற்கு ஆடம்பர பேக்!

Share:

இங்கிலாந்து , ஜூன் 01-

பிரதமர் வைத்திருக்கும் சர்ச்சையைக் கிளப்பிய பேக் டுமி அரைவ் பிராட்லி மாடல் என்று தெரிகிறது. இது செல்ஃப்ரிட்ஜ்கள் போன்ற ஆடம்பர பொருட்களை விற்கும் கடைகளில் 750 பவுண்டுக்கு விற்கப்படுகிறது.

இங்கிலாந்து பிரதம மந்திரி ரிஷி சுனக் விலை உயர்ந்த தோள்பையை அணிந்துகொண்டு தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றது சர்ச்சையாகியுள்ளது. நாட்டின் ஏழ்மையான பகுதிகளில் ஒன்றான கார்ன்வாலுக்குச் சென்றபோது, ​​750 பவுண்டு (இந்திய மத்திப்பில் தோராயமாக ரூ.79,497) மதிப்புள்ள தோள்பையை அணிந்து சென்றது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ரிஷி சுனக் கார்ன்வாலுக்கு ரயிலில் செல்லும்போது, ​​'RS' என்ற தனது பெயரின் முதல் எழுத்துக்கள் கொண்ட ஒரு ஆடம்பர டுமி பையை எடுத்துச் சென்றதைக் காண முடிந்தது. கன்சர்வேடிவ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள பென்சான்ஸுக்கு ரயிலில் ஸ்லீப்பர் பெர்த்தில் ரிஷி சுனக் பயணித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் வைத்திருக்கும் சர்ச்சையைக் கிளப்பிய பேக் டுமி அரைவ் பிராட்லி மாடல் என்று தெரிகிறது. இது செல்ஃப்ரிட்ஜ்கள் போன்ற ஆடம்பர பொருட்களை விற்கும் கடைகளில் 750 பவுண்டுக்கு விற்கப்படுகிறது.

ரிஷி சுனக் இவ்வாறு விலை உயர்ந்த பொருளை பயன்படுத்துவது முதல் முறை அல்ல. ஜூலை 2022இல், அவர் ஒரு கட்டிடத் தளத்திற்குச் சென்றபோது 490-பவுண்டு மதிப்புள்ள பிராடா பிராண்டு தோல் காலணிகளை அணிந்திருந்தார்.

சமீபத்திய சண்டே டைம்ஸ் பணக்காரர்கள் பட்டியலின்படி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு அந்நாட்டு மன்னர் சார்லஸின் சொத்து மதிப்பை மிஞ்சியிருக்கிறது.

ரிஷி சுனக் - அக்ஷதா மூர்த்தி தம்பதியின் சொத்து மதிப்பு 120 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால் இங்கிலாந்தின் மன்னரான சார்லஸை முந்தி, அவர்களின் சொத்து மதிப்பு 529 மில்லியன் பவுண்டுகளில் இருந்து 651 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்தது.

Related News

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்