டக்கா, அக்டோபர்.15-
வங்காளதேசத்தில் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், 16 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். எட்டு பேர் காயமடைந்தனர். வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஆடை தொழிற்சாலையின் ரசாயன கிடங்கில் அத்தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென பரவி அருகில் இருந்த ஆடை தொழிற்சாலையிலும் பற்றியது. பல மணி நேர போராட்டத்துக்குப் பின், தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். ஆடை தொழிற்சாலையின் முதல் மற்றும் இரண்டாவது மாடிகளில் இருந்து, 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவர்கள் அனைவரும் நச்சு வாயுவைச் சுவாசித்ததால் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.