Oct 30, 2025
Thisaigal NewsYouTube
காஸாவில் உதவிப் பொருட்கள் வழங்கும் இடத்தில் மூண்ட வன்முறை: 2
உலகச் செய்திகள்

காஸாவில் உதவிப் பொருட்கள் வழங்கும் இடத்தில் மூண்ட வன்முறை: 2

Share:

காஸா, ஜூலை.16-

காஸாவில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பகுதியில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்தனர். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நீடித்து வருகிறது.

கட்டார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் தற்காலிகப் போர் நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. எனினும் இரு தரப்பினரும் அடிக்கடி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

காஸா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் பொறுப்பை, காஸா மனிதாபிமான அறக்கட்டளையிடம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வழங்கியுள்ளன. இந்த அறக்கட்டளையின் மூலம் தினமும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

அப்படி உணவுப் பொருட்களை பெறும் போது, சிலர் ஆத்திரத்தில் இஸ்ரேல் படையினரைத் தாக்குகின்றனர். இதனால், தற்காப்புக்காக ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 875 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா., மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாலஸ்தீனத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கான் யூனிஸில் நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் இடத்தில் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் தூண்டிவிட்ட வன்முறையால் 19 பேர் கூட்டத்தில் மிதியுண்டு உயிரிழந்தனர். ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய கிளர்ச்சியாளர்களே இச்சம்பவத்திற்குக் காரணம். திட்டமிட்டே அமைதியை சீர்குலைக்கின்றனர் என காஸா மனிதநேய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Related News