Oct 28, 2025
Thisaigal NewsYouTube
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,000த்தை நெருங்கியது
உலகச் செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,000த்தை நெருங்கியது

Share:

புதுடெல்லி, ஜூன்.02-

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,961 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். 2019ம் ஆண்டு முதன்முறையாக பரவிய கொரோனா தொற்று காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட மக்கள், கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், நாடு முழுதும் கொரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல மறுபடியும் வேகமெடுத்துள்ளது.

சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுதும் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 203 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,961 பேராக அதிகரித்துள்ளது.

இதனால், அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள மாநிலமான கேரளாவில் இதுவரையில் 1,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மஹராஷ்டிராவில் 506 பேரும், டில்லியில் 484 பேரும், மேற்கு வங்கத்தில் 339 பேரும், குஜராத்தில் 338 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கேரளா, தமிழகம் மற்றும் டில்லியில் மட்டும் தான் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

Related News