Oct 24, 2025
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

கிழக்கு ஆஸ்திரேலியாவில் சுறா மீன் ஹாக்கி சிறுமி மரணம்

Share:

ஆஸ்திரேலியா, பிப்.4-

கிழக்கு ஆஸ்திரேலிய கடற்பகுதியில் நீந்திக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை சுறா மீன் தாக்கிக் கொன்றது. கடந்த ஐந்து வாரங்களில் அந்நாட்டில் பதிவான மூன்றாவது அபாயகரமான சுறா மீன் தாக்குதல் சம்பவம் அதுவாகும். குயின்ஸ்லாந்தில் உள்ள வூரிம் கடற்கரைக்கு விரைந்த உதவி மருத்துவர்கள் பலத்த காயங்களுக்கு இலக்கான அச்சிறுமிக்கு சிகிச்சை அளித்தனர் என்று ஆம்புலன்ஸ் சேவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

காவல்துறையின் கூற்றுப்படி, பிரிஸ்பேனுக்கு வடக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரிபி தீவில் உள்ள பிரபலமான சர்ஃபிங் இடத்தில் மாலையில் நீந்திக் கொண்டிருந்த போது அந்த சிறுமி சுறாவால் தாக்கப்பட்டார்.

"பாதிக்கப்பட்டவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளானார். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு அவர் காயங்களால் இறந்தார்" என்று குயின்ஸ்லாந்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார். விசாரணை அதிகாரிக்கு அனுப்ப போலீசார் அறிக்கை தயார் செய்வார்கள்.

Related News