Oct 24, 2025
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

பிரதமர் மோடி விமானத்திற்கு மிரட்டல்: ஆடவர் கைது

Share:

மும்பை, பிப்.12-


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு மூன்று நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்காக அவர் கடந்த 11 ஆம் தேதி அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில் பிரான்ஸ் புறப்படும் முன் பிரதமர் மோடியின் விமானத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த மிரட்டல் அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. விமானத்தை பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என அந்த மிரட்டலில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஆடவர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் சம்பந்தப்பட்ட ஆடவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.

Related News