இஸ்ரேல்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடக்கும் போரை 4 நாட்கள் தற்காலிகமாக நிறுத்துவதறாக இஸ்ரேல் திடீரென ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் தான் அதன் பின்னணி பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஆகியவை பக்கத்தில் பக்கத்தில் உள்ளன. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசாவில் ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்கு இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தெரிவித்துள்ளது. மேலும் இருதரப்பும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தான் கடந்த மாதம் 7 ம்தேதி இந்த மோதல் என்பது போராக மாறியது. அதாவது அன்றைய தினம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. அதோடு இஸ்ரேல் எல்லையை தகர்த்து அந்த நாட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி பொதுமக்களை சிறைபிடித்து சென்றது.
இதனால் கோபமடைந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் தொடங்கிவிட்டதாக கூறி தாக்குதலை தொடங்கினர். காசாவில் முதலில் வான்வெளி தாக்குதல் நடத்தப்ப்பட்டது. அதன்பிகு வடக்கு காசாவில் பல இடங்களில் இஸ்ரேல் படைகள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது போர் 46வது நாளாக நடந்து வருகிறது. இதுவரை காசாவில் 14 ஆயிரம் வரை பலியாகி உள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 1000க்கும் அதிகமானவர்களும் பலியாக உள்ளனர்.
மேலும் இன்னும் பல ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இதுமட்டுமின்றி வடக்கு காசாவில் உள்ள மருத்துவமனைகள், வீடுகள் என ஏராளமான கட்டடங்கள் இடிந்துள்ளன. இப்படி போர் தீவிரமான நிலையில் அமெரிக்கா, இந்தியா, உள்பட பல நாடுகள் போரை இருதரப்பும் கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்தது. ஆனால் இஸ்ரேல் அதனை ஏற்கவில்லை.
இந்நிலையில் தான் தற்போது காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் ‛ஓகே' கூறியுள்ளது. அதாவது நாளை முதல் 4 நாட்கள் காசாவில் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த கத்தார் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு அமெரிக்காவும் உதவியது.