Oct 17, 2025
Thisaigal NewsYouTube
இந்தியாவுக்குள் ஊடுருவல் முயற்சிக்கு மூளையாக இருந்த பயங்கரவாதி சுட்டுக் கொலை
உலகச் செய்திகள்

இந்தியாவுக்குள் ஊடுருவல் முயற்சிக்கு மூளையாக இருந்த பயங்கரவாதி சுட்டுக் கொலை

Share:

ஶ்ரீநகர், ஆகஸ்ட்.30-

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிக்கு மூளையாகச் செயல்பட்டு வந்த பாகு கான் என்ற பயங்கரவாதியைப் பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். அந்நபரைப் பல ஆண்டுகளாக ராணுவத்தினர் தேடி வந்த நிலையில், ஊடுருவல் முயற்சியின் போது கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஆபரேஷன் நவ்ஷெரா நார் IV' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் கீழ் நவ்ஷெரா நாருக்கு அருகே இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சிக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வந்தனர். இதில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் ஊடுருவல் முயற்சிக்கு உதவி செய்து வந்த முக்கிய நபரும் கொல்லப்பட்டான்.

குரேஸ் செக்டாரில் பல்வேறு பகுதிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்ட ஊடுருவல் முயற்சிகளுக்கு பாகு கான் காரணமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடினமான பகுதிகள் மற்றும் ரகசிய பாதைகளை அறிந்து வைத்ததன் மூலம் இந்த ஊடுருவல் முயற்சியில் பெரும்பாலானவை வெற்றி பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகு கான் தேவைப்படுபவனாக இருந்துள்ளான். இவன், ஹிஸ்புல் கமாண்டராக இருந்தாலும், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய குரேஸ் மற்றும் அண்டைப் பகுதிகளில் வேறு சில பயங்கரவாதக் அமைப்புகளின் ஊடுருவல் முயற்சிகளுக்கும் உதவி செய்து வந்துள்ளான் என்று தெரிய வந்துள்ளது.

Related News

இந்தியாவுக்குள் ஊடுருவல் முயற்சிக்கு மூளையாக இருந்த பயங்க... | Thisaigal News