Nov 28, 2025
Thisaigal NewsYouTube
சீனாவில் சோதனை ரயில் மோதி 11 ஊழியர்கள் பலி
உலகச் செய்திகள்

சீனாவில் சோதனை ரயில் மோதி 11 ஊழியர்கள் பலி

Share:

பெய்ஜிங், நவம்பர்.28-

சீனாவில் சோதனை ரயில் மோதியதில் தண்டவாளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 11 ஊழியர்கள் பரிதாபமாக மாண்டனர்.

சீனாவின், யுனான் எனுமிடத்தில் குன்மிங் நகரில் உள்ள லுயோயாங் ரயில்வே ஸ்டேஷன் வழியாக நில அதிர்வு உபகரணங்களைப் பரிசோதிக்கும் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய வளைவான பகுதியில் திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக அங்கு தண்டவாளப் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது சோதனை ரயில் மோதியது.

அதில் அங்கிருந்த தொழிலாளர்கள் 11 பேர் உடல் நசுங்கிப் பலியாகினர். படுகாயமடைந்த தொழிலாளர்கள் இருவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அந்நாட்டு ரயில்வே துறை, ரயில் சோதனை குறித்து முன்கூட்டியே எச்சரிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே அமைப்பைக் கொண்ட சீனாவில், அடிக்கடி ரயில் விபத்துகள் ஏற்படுவது பயணிகள் மற்றும் அதிகாரிகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Related News