Jun 13, 2026
Thisaigal NewsYouTube
போஸ்னியாவில் முதியோர் இல்லம் தீப் பிடித்ததில் 11 பேர் பலி
உலகச் செய்திகள்

போஸ்னியாவில் முதியோர் இல்லம் தீப் பிடித்ததில் 11 பேர் பலி

Share:

ஹெர்ஸகோவினா, நவம்பர்.05-

ஐரோப்பிய நாடான போஸ்னியாவில், முதியோர் இல்லத்தில் தீப்பிடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர். வடக்கு போஸ்னியா நகரம் துஸ்லா. அங்கு அந்த முதியோர் இல்லம் உள்ளது. இந்த இல்லத்தின் 7வது தளத்தில் எதிர்பாராத விதமாகத் தீப் பிடித்தது.

மளமளவென தீ மற்ற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. அங்கே இருந்தவர்கள் வயது முதிர்வு காரணமாக வெளியில் வரமுடியாமல் தவித்தனர்.

அது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் மீட்புப் பணியில் இறங்கினர்.

பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எதனால் தீப் பிடித்தது என்பது பற்றிய காரணம் தெரியவில்லை. இருப்பினும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறி உள்ளனர். இந்தச் சம்பவத்தை அறிந்த அந்நாட்டு பிரதமர், இது மிகப் பெரிய ஒரு பேரழிவு என்று வேதனை தெரிவித்துள்ளார்.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி