Oct 19, 2025
Thisaigal NewsYouTube
இது ரொம்பவே ஆபத்து! லெபனான் & சிரியா மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. பெரிதாகும் போர்?
உலகச் செய்திகள்

இது ரொம்பவே ஆபத்து! லெபனான் & சிரியா மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. பெரிதாகும் போர்?

Share:

அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் பல வாரங்களாகத் தொடரும் நிலையில், இது பிராந்திய போராக விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த அக். 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் மோசமான தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு முன்பும் இரு தரப்பிற்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளது என்ற போதிலும், இந்தளவுக்கு ஒரு மோசமான தாக்குதல் இஸ்ரேல் மீது நடந்ததே இல்லை.

ஏவுகணை தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் நாட்டில் நுழைந்தும் தாக்குதல் நடத்தினர். மேலும், பலரைப் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இஸ்ரேல்: இந்தத் தாக்குதலை இஸ்ரேல் துளியும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை. இருப்பினும், ஒரு மாதிரி சுதாரித்துக் கொண்டு இஸ்ரேல் மீண்டும் பதிலடி கொடுக்க தொடங்கியது. காசா மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோல காசா மீது படையெடுப்பு நடத்தவும் இஸ்ரேல் ரெடியாகி வருகிறது. இதன் காரணமாகவே ஹமாஸ் படை அதிகம் இருக்கும் பகுதியாக நம்பப்படும் வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் உத்தரவிட்டு வருகிறது.

அதேநேரம் படையெடுப்பு நடந்தால் இந்தப் போர் பிராந்தியம் முழுக்க பரவும் அபாயமும் இருக்கிறது. இதன் காரணமாகவே அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் படையெடுப்பு வேண்டாம் எனத் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. மேலும், போருக்கு மத்தியில் சுமார் 30க்கும் மேற்பட்ட டிரக்குகளில் உதவி பொருட்கள் காசாவிற்குள் நுழைந்தன. இது ஒரு பக்கம் இருந்தாலும் அந்த பிராந்தியம் முழுக்க போர் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

லெபனான்: லெபனான் எல்லையில், ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே அவ்வப்போது தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரேலின் ஆளில்லா டிரோன் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.. ஹிஸ்புல்லா அமைப்பு இதுபோல இஸ்ரேல் டிரோன் விமானத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

Related News