Oct 17, 2025
Thisaigal NewsYouTube
மெக்சிகோ சிறையில் கைதிகளுக்குள் கலவரம்: சண்டையில் 7 பேர் அடித்துக் கொலை
உலகச் செய்திகள்

மெக்சிகோ சிறையில் கைதிகளுக்குள் கலவரம்: சண்டையில் 7 பேர் அடித்துக் கொலை

Share:

லக்ஸ்பான், ஆகஸ்ட்.05-

மெக்சிகோவில் சிறையில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 7 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மெக்சிகோ நாட்டில் வெராக்ரூஸ் பகுதியில் டக்ஸ்பன் சிறை உள்ளது. இந்தச் சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில், கைதிகளுக்கும், கிரிமினல் கும்பலான க்ரூபோ சோம்ப்ராவுக்கும் இடையே கலவரம் மூண்டது.

க்ரூபோ சோம்ப்ரா கும்பலானது மற்ற கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கலவரத்தின் போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். சிறைச்சாலையின் உள்ளே கைதிகள் சிலர் தீ வைத்தனர்.

கலவரத்தில் சிக்கியவர்களில் 7 கைதிகள் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். சிறையில் மூண்ட கலவரம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Related News