Oct 17, 2025
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலியாவில் உயர் பதவியிலுள்ள பெண்களின் AI ஆபாசக் காணொளியை வெளியிட்ட நபருக்கு 340,000 டாலர் அபராதம்!
உலகச் செய்திகள்

ஆஸ்திரேலியாவில் உயர் பதவியிலுள்ள பெண்களின் AI ஆபாசக் காணொளியை வெளியிட்ட நபருக்கு 340,000 டாலர் அபராதம்!

Share:

சிட்னி, செப்டம்பர்.27-

ஆஸ்திரேலியாவில் AI மூலமாக உயர் பதவியில் உள்ள பெண்களின் ஆபாசப் படங்களைத் தயாரித்து அதனை இணையத்தில் வெளியிட்ட ஆடவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 3 லட்சத்து 40,000 ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் விதித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் ஃபெடரல் நீதிமன்றத்தில் அந்தோனியோ ரொதொண்டோ என்ற அந்நபர் தனது குற்றங்களை ஒப்புக் கொண்டதால் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் நீதிமன்றத்தில் இச்சம்பவம் குறித்து விவரிக்கும் போது, இதனால் தான் மிகவும் பாதிக்கப்பட்டு மன உளச்சலுக்கு உள்ளானதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்நபர் காணொளிகள் வெளியிடப் பயன்படுத்திய deepfakes இணையதளம் உடனடியாக முடக்கப்பட்டது.

Related News

ஆஸ்திரேலியாவில் உயர் பதவியிலுள்ள பெண்களின் AI ஆபாசக் காணொ... | Thisaigal News