Oct 20, 2025
Thisaigal NewsYouTube
இஸ்ரேலின் கொள்கலன் கப்பல் தீ விபத்து: வெளியான காணொளி தொடர்பில் விளக்கம்
உலகச் செய்திகள்

இஸ்ரேலின் கொள்கலன் கப்பல் தீ விபத்து: வெளியான காணொளி தொடர்பில் விளக்கம்

Share:

ஈரான்,ஜூலை 05-

ஈரானுக்கு (Iran) ஆதரவான யேமனின் ஹதி தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலால், அரபியக் கடற்பகுதியில் இஸ்ரேலின் (Isreal) பாரிய கொள்கலன் கப்பலில் தீ ஏற்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட காணொளி செய்தி உண்மைக்கு புறம்பானது என்று சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இது, 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காணொளியாகும் என குறித்த ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த காணொளியை மையப்படுத்தி இலங்கையின் ஊடகம் ஒன்று, இந்த தாக்குதல், பாலஸ்தீன ஹமாஸூக்கு ஆதரவாக ஹதி தீவிரவாதிகளால், நடத்தப்பட்ட தாக்குதல் என்று கடந்த ஜூன் 27ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டிருந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

எனினும், இதனை மறுத்துள்ள சர்வதேச ஊடகம், அது 2017இல் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காணொளி என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், யேமனின் ஈரான் ஆதரவு ஹதி கிளர்ச்சியாளர்கள், 2023 நவம்பர் முதல் செங்கடல் மற்றும் அரேபிய கடலில் உள்ள வணிக கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

அதேவேளை, இஸ்ரேல் படையினர் பாலஸ்தீனத்தில் ஹமாஸூக்கு எதிரான போரை நிறுத்தவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்காகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக ஹதி கிளர்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

Related News