Oct 19, 2025
Thisaigal NewsYouTube
உலகமே தலைகீழாக மாறிடும்.. இன்னும் ஐந்தே ஆண்டுகள் தான்.. AI என்ன செய்யும் தெரியுமா.. பில் கேட்ஸ் பரபர
உலகச் செய்திகள்

உலகமே தலைகீழாக மாறிடும்.. இன்னும் ஐந்தே ஆண்டுகள் தான்.. AI என்ன செய்யும் தெரியுமா.. பில் கேட்ஸ் பரபர

Share:

வாஷிங்டன்: ஏஐ துறை இப்போது உலகில் மிகப் பெரிய புயலாக உருவெடுத்துள்ள நிலையில், இதன் எதிர்காலம் குறித்து உலகின் பெரும் பணக்காரரான பில் கேட்ஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் இப்போது புயலைக் கிளப்பிய தொழில்நுட்பம் என்றால் அது ஏஐ தொழில்நுட்பம் தான். குறிப்பாக சாட் ஜிபிடி கிடைத்த வெற்றி மற்ற ஏஐ மாடல்களுக்கும் மிகப் பெரிய உந்துதலாக அமைந்தது.

மற்ற ஏஐ மாடல்களிலும் முதலீடுகள் குவிய ஆரம்பித்தன. மருத்துவம், தொழில்நுட்பம், முதலீடு என பல்வேறு துறைகளிலும் புது புது ஏஐ மாடல்கள் வரத் தொடங்கின. அதேநேரம் இது வேலையிழப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

பில் கேட்ஸ்: இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு வேற லெவலில் வளர போகிறது. அதேநேரம் இந்த தொழில்நுட்பத்தைப் பார்த்து நாம் அச்சப்படத் தேவையில்லை.. இதன் மூலம் நமக்குப் பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்" என்றார்.

வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பத்தால் வளர்ந்த நாடுகளில் சுமார் 60% வேலைகள் காலியாகும் என்றும் சர்வதேச அளவில் 40% வேலைகள் காலியாகும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கடந்த வாரம் கூறியிருந்த நிலையில், அதற்குப் பதிலாக பில் கேட்ஸ் இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளார்.

Related News