Oct 24, 2025
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

உத்தரகண்டில் பனிச்சரிவில் சிக்கிய 47 ஊழியர்கள்; மீட்பு பணிகள் தீவிரம்

Share:

சமோளி, பிப்.28-

உத்தரகண்டில் பனிச்சரிவில் சிக்கிய 57 ஊழியர்களில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தோ - திபெத் எல்லை அருகே உள்ள உத்தரகண்டின் சமோளி மாவட்டத்தின் மனா கிராமத்தில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலை பணியில் ஈடுபட்டிருந்த 57 ஊழியர்கள் இந்த பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து, மாநில பேரிடர் மீட்பு குழு, தேசிய பேரிடர் மீட்பு குழு, மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்தோ -திபெத் எல்லை போலீசார் உள்ளிட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பனிச்சரிவில் சிக்கிய 57 பேரில் 10 பேர் மீட்கப்பட்டு விட்டனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மலைப் பகுதிகளுக்கு கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News