Dec 28, 2025
Thisaigal NewsYouTube
அமெரிக்காவில் பனிப்புயல்; 1,800 விமானப் பயணங்கள் ரத்து
உலகச் செய்திகள்

அமெரிக்காவில் பனிப்புயல்; 1,800 விமானப் பயணங்கள் ரத்து

Share:

நியூயார்க், டிசம்பர்.28-

அமெரிக்காவை, 'டெவின்' என்ற குளிர்காலப் புயல் தாக்கியதில், 1,800க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், கடந்த சில தினங்களுக்கு முன் 54 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்தது. இதனால் அம்மாவட்டம் வெள்ளக்காடாக மாறியது. வெள்ளப் பெருக்குடன், பல இடங்களில் சேறும் ஆறு போல பாய்ந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், நியூயார்க் மற்றும் நியூஜெர்சியை, 'டெவின்' என்ற குளிர்காலப் புயல் தாக்கியுள்ளது. இதனால் கனமழையும், கடும் பனிப்பொழிவும் இருந்து வருகிறது.

இதையடுத்து நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வானிலை மோசமடைந்ததால் 1,800க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. 6,883 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன.

Related News