துபாய், ஏப்ரல் 08-
வீடியோவில், துபாயில் ஆனந்த் அம்பானியுடன் அணிவகுத்துச் சென்ற எல்லா கார்களையும் காண முடிகிறது. ஆனந்த அம்பானியின் ஆரஞ்சு நிற ரோல்ஸ் ராய்ஸ் தவிர மற்றொரு வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் காரும் இருக்கிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன், தொழில் அதிபர் ஆனந்த் அம்பானி சமீபத்தில் துபாயில் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஷாப்பிங் செய்யப் போன வீடியோ வைரலாகி இருக்கிறது.
ஆனந்த் அம்பானியின் பாதுகாப்புக்காக அவரை ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பின்தொடர்ந்து வந்த சுமார் 20 கார்களும் பெரும்பாலும் சொகுசு எஸ்யூவி கார்கள். இவ்வளவு பாதுகாப்புடன் சென்ற ஆனந்த் அம்பானி ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் இருந்து ஷாப்பிங் மாலில் இறங்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியதால், இவ்வளவு பாதுகாப்புடன் போய் ஆனந்த் அம்பானி என்ன வாங்கினார் என்று நெட்டிசன்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். பலருக்கும் அவருக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பைக் குறிப்பிட்டு வியப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.