டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்தாண்டு தொடங்கிய போர் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில், இது வரலாற்றில் மிக மோசமான இடத்தை பிடித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே 100 ஆண்டுகளாகப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இரு தரப்பிற்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்ட போதிலும், சண்டை பெரியளவில் கையை மீறிச் செல்லவில்லை.
ஆனால், கடந்த அக். மாதம் நடந்த தாக்குதல் அப்படியில்லை. இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அது போராக மாறியது. உக்ரைன் போருக்குப் பிறகு உலகம் சந்திக்கும் இரண்டாவது போர் இதுவாகும்.
வரலாறு: கடந்த 1914க்கு முன் வரை ஓட்டோமான் பேரரசு தான் பாலத்தீன பகுதியை ஆண்டு வந்தது. அப்போது பாலத்தீனத்தில் அரேபியர்கள் தான் பெரும்பான்மையாக இருந்தார்கள்.. யூதர்கள் சிறுபான்மையினராகவே இருந்தார்கள். இருப்பினும், முதலாம் உலகப்போரில் ஒட்டோமான் பேரரசு தோற்ற நிலையில், பாலஸ்தீனம் பிரிட்டன் ஆட்சிக்குக் கீழ் வந்தது. அப்போதும் பெரியளவில் பிரச்சினை இல்லை.
இருப்பினும் 1920 முதல் 1940 காலகட்டத்தில் பாலஸ்தீன பகுதியில் யூதர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. குறிப்பாக ஹிட்லர் காலத்தில் அவருக்கு நடந்த கொடுமைகள் தான் அதிகப்படியான மக்கள் இங்கே வரக் காரணமாக இருந்தது. இதனால் பாலஸ்தீனத்தில் யூதர்கள் அதிகரித்து, பாலஸ்தீன அரபிகள் எண்ணிக்கை குறையவே அங்கே இரு தரப்பிற்கும் இடையே மோதல் அதிகரித்தது.