Oct 30, 2025
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் நடைபெறும் அமைதிப் பேச்சு வார்த்தையில் பங்கேற்கிறது கம்போடியா
உலகச் செய்திகள்

கோலாலம்பூரில் நடைபெறும் அமைதிப் பேச்சு வார்த்தையில் பங்கேற்கிறது கம்போடியா

Share:

நொம் பென், ஜூலை.28-

எல்லைப் பகுதியில் வீற்றிருக்கும் புராதான ஆலயம் உரிமை தொடர்பில் எழுந்த எல்லை தகராற்றில் போரில் இறங்கியுள்ள கம்போடியாவும், தாய்லாந்தும், அமைதிப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்று, கம்போடியா தூதுக் குழுவினர், இன்று திங்கட்கிழமை கோலாலம்பூரில் நடைபெறும் சிறப்புக் கூட்டத்திக் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இந்த சிறப்புக் கூட்டம் இன்று கோலாலம்பூரில் நடைபெறுவதை கம்போடியா பிரதமர் ஹுன் மானெட் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆசியான் தலைவரான டத்தோஸ்ரீ அன்வாரின் அறிவுறுத்தலுக்கு இணங்க, இந்தச் சந்திப்பில் நாங்கள் கலந்து கொள்கிறோம் என்று நேற்றிரவு தமது முகநூலில் கம்போடியா பிரதமர் ஹுன் மானெட் தெரிவித்துள்ளார்.

இந்த சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு நன்றி கூற கம்போடியா கடமைப்பட்டுள்ளதாக ஹுன் மானெட் குறிப்பிட்டார்.

அன்வாரின் ஆலோசனைக்கு ஏற்ப தாய்லாந்துடனான போரை நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம். அமைதிப் பேச்சு வார்த்தைக்கு கம்போடியா தயார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லை தகராற்றினால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடைபெறும் ஆயுதப் போராட்டம் கடந்த வாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

இன்றையக் கூட்டத்தில் கம்போடியா உயர்மட்ட அளவிலான குழுவினருடனான பேச்சு வார்த்தையில் தாய்லாந்து இடைக்கால பிரதமர் பூம்தாம் வேசாயாசாய் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News