Oct 19, 2025
Thisaigal NewsYouTube
தந்தை அதிபர் வேட்பாளர், மகன் பிரதமர் வேட்பாளர்: பாகிஸ்தான் மக்கள் கட்சி அறிவிப்பு
உலகச் செய்திகள்

தந்தை அதிபர் வேட்பாளர், மகன் பிரதமர் வேட்பாளர்: பாகிஸ்தான் மக்கள் கட்சி அறிவிப்பு

Share:

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அக்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிபர் வேட்பாளராக அவரது தந்தை ஆசிப் அலி சர்தாரி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சி கவிழ்ந்த பிறகு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன.

இதில் பிலாவல் பூட்டோ 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு வரை வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார்.

Related News