தமிழகம், செப்டம்பர்.17-
தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தளங்களில் ஒன்றான கொடைக்கானலில், கடந்த சனிக்கிழமை நடந்த விபத்து ஒன்றில் 12 மலேசியர்கள் காயமடைந்துள்ளனர்.
வெள்ளைப் பாறை என்ற பகுதியில் அவர்கள் சென்ற வாகனம் சாலையில் உள்ள தடுப்புச் சுவற்றில் மோதியதில் நிலை குலைந்து, 100 அடிப் பள்ளத்தில் விழுந்ததாக தமிழக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இந்நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக சென்னையிலுள்ள மலேசியத் தூதரகம், மலேசிய வெளியுறவு அமைச்சிற்குத் தகவல் அளித்துள்ளது.
அதே வேளையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அவர்களைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளது விஸ்மா புத்ரா.