சார்லோட், செப்டம்பர்.30-
ஐரோப்பாவிலிருந்து வடக்கு கரோலினாவின் சாட்லோட் நகரை நோக்கிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் லேண்டிங் கியரில் சடலம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சார்லோட் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவ்விமானத்தைப் பராமரித்துக் கொண்டிருந்த பணியாளர்கள் அச்சடலத்தைக் கண்டறிந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்நபர் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு பயணித்திருக்கலாம் என்றும், போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே இறந்திருக்கலாம் என்றும் சார்லோட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
என்றாலும், இது குறித்து மேல் விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.