கோலாலம்பூர், டிசம்பர்.03-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை டிசம்பர் 4 ஆம் தேதி சிங்கப்பூருக்கு அலுவல் பயணம் மேற்கொள்கிறார். சிங்கப்பூரில் நடைபெறும் மலேசியா – சிங்கப்பூர் தலைவர்களுக்கான 12 ஆவது ஓய்வுத்தள சந்திப்பு நிகழ்வில் பிரதமர் அன்வார் கலந்து கொள்ளவிருக்கிறார்.
இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான இந்த வருடாந்திரச் சந்திப்பு, நீண்ட கால விவகாரங்களைச் சமாளிப்பதற்கும் ஒத்துழைப்பு தேவைப்படும் புதிய துறைகளில் பணியாற்றுவதற்கும் ஒரு முக்கியத் தளமாகும். மேலும் இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் பேசுவார்கள்.
இரு நாட்டுத் தலைவர்களின் இந்தச் சந்திப்பு சிங்கப்பூர் தி ரிட்ஸ்-கார்ல்டன் மில்லினியா ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்தச் சந்திப்பில் சிங்கப்பூர் பிரதமர் லாான்ஸ்ஸ் வோங், பிரதமர் அன்வாருக்கு மதிய விருந்தளிப்பார்.








