Jan 18, 2026
Thisaigal NewsYouTube
மெக்சிகோவில் தொடர்ந்து பெய்யும் மழை: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
உலகச் செய்திகள்

மெக்சிகோவில் தொடர்ந்து பெய்யும் மழை: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

Share:

மெக்சிகோ சிட்டி, அக்டோபர்.12-

மெக்சிகோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 41 பேர் உயிரிழந்து உள்ளனர். மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. மத்திய மாநிலமான ஹிடால்கோ கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. காசோன்ஸ் ஆற்றின் கரையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் கார்கள் அடித்து செல்லப்பட்டன.

நிலச்சரிவில் ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன. மேலும், 59 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், 308 பள்ளிகள் சேதம் அடைந்தன. 17 மாநிலங்களைச் சேர்ந்த 84 நகராட்சிகள் மின்சாரச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

மீட்புப் பணிக்கான 8700 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Related News