Oct 20, 2025
Thisaigal NewsYouTube
140 கோடி இந்தியர்கள் இதயத்தை வென்ற அமீரக அதிபர்!அபுதாபி கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி நெகிழ்ச்சி
உலகச் செய்திகள்

140 கோடி இந்தியர்கள் இதயத்தை வென்ற அமீரக அதிபர்!அபுதாபி கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி நெகிழ்ச்சி

Share:

அபுதாபி: ஐக்கிய அமீரகத்தில் முதல் இந்து கோயில் திறக்கப்பட்ட நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, இந்த கோயில் 140 கோடி இந்தியர்களின் இதயங்களை வென்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றிருந்தார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி அமீரகம் சென்றடைந்தார். அங்கே அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்து கோயில்: அங்கு அபுதாபியின் முதல் இந்து கோவிலைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார், இது மனிதக்குல பாரம்பரியத்தின் மிக முக்கிய சின்னமாக விளங்கும் என்றும் மனித வரலாற்றில் தங்கத்தினாலான புதிய அத்தியாயத்தை எழுதியதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News