Oct 17, 2025
Thisaigal NewsYouTube
ஆப்கானிஸ்தானில் பேருந்தில் தீப்பற்றியதில் 71 பேர் உடல் கருகி பலி
உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பேருந்தில் தீப்பற்றியதில் 71 பேர் உடல் கருகி பலி

Share:

காபூல், ஆகஸ்ட்.20-

ஆப்கானிஸ்தானில் புலம் பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்தில் தீ பரவியது. இதில் 71 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் பகுதியில் அந்த பேருந்து புலம் பெயர்ந்தோரை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது, டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பேருந்து ஒரு லாரி மற்றும் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 குழந்தைகள் உள்பட 71 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

ஈரான் அகதிகளை ஏற்றிக் கொண்டு காபூல் நகரை நோக்கி பேருந்து சென்ற போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த விபத்து அண்மைய வரலாற்றில் மிகவும் மோசமான போக்குவரத்து விபத்துகளில் ஒன்றாகும் என அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related News