Oct 28, 2025
Thisaigal NewsYouTube
இலங்கையில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 21 பேர் பலி
உலகச் செய்திகள்

இலங்கையில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 21 பேர் பலி

Share:

கொழும்பு, மே.11-

இலங்கையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அந்த பேருந்து கதிர்காமத்தில் இருந்து மத்திய இலங்கையில் உள்ள குருணாகல் நோக்கி சென்று கொண்டு இருந்தது. அதில் 70க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். கொத்மலை பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி மீட்புப் பணியை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்திற்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என மீட்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related News

விமான நிலையத்தில் டிரம்ப் நடனம் ஆடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது

விமான நிலையத்தில் டிரம்ப் நடனம் ஆடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது

மலேசியா ஓர் அற்புதமான நாடு: டொனால்ட் டிரம்ப் பாராட்டு

மலேசியா ஓர் அற்புதமான நாடு: டொனால்ட் டிரம்ப் பாராட்டு

47-வது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு ஜப்பான் புறப்பட்டார் டொனால்ட் டிரம்ப்!

47-வது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு ஜப்பான் புறப்பட்டார் டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: 1,711 மலேசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு - MITI அறிவிப்பு!

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: 1,711 மலேசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு - MITI அறிவிப்பு!

"உலகளாவிய நிலைத்தன்மைக்குத் தூணாக இந்தியா-ஆசியான் கூட்டு": பிரதமர் மோடி பெருமிதம்!

"உலகளாவிய நிலைத்தன்மைக்குத் தூணாக இந்தியா-ஆசியான் கூட்டு": பிரதமர் மோடி பெருமிதம்!

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!