Oct 30, 2025
Thisaigal NewsYouTube
தொழில்நுட்பக் கோளாறு: லண்டன் செல்லும் ஏர் இந்தியா ட்ரீம் லைனர் விமானம் ரத்து
உலகச் செய்திகள்

தொழில்நுட்பக் கோளாறு: லண்டன் செல்லும் ஏர் இந்தியா ட்ரீம் லைனர் விமானம் ரத்து

Share:

புதுடெல்லி, ஜூலை.31-

லண்டனுக்குக் கிளம்பிய ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ட்ரீம் லைனர் விமானம், மேலே பறக்க இருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. எனவே விமானம் உடனடியாக புறப்பட்ட இடத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது.

ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ட்ரீம் லைனர் விமானம்( ஏஐ 2017) தலைநகர் டில்லியில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குக் கிளம்பியது. ஓடுபாதையில் புறப்பட்ட அந்த விமானம் மேலே பறக்க இருந்த நிலையில், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர்.

வழக்கமான நடைமுறைகளின்படி, அந்த விமானம், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில், மாற்று விமானம் மூலம் பயணிகள் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பயணிகளுக்குத் தேவையான உதவிகளை ஊழியர்கள் செய்து கொடுத்து வருகின்றனர். பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பே எங்களுக்கு அதிக முக்கியத்துவம் என விமான நிறுவனச் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 12ம் தேதி ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்த போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம் குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குக் கிளம்பிய சிறிது நேரத்தில் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த ஒருவரைத் தவிர 241 பயணிகள் உயிரிழந்தது கூறிப்பிடத்தக்கது.

Related News