புதுடெல்லி, நவம்பர்.11-
இந்தியாவின் தலைநகரான டெல்லி செங்கோட்டை அருகே நேற்று திங்கட்கிழமை மாலை கார் ஒன்று வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று மாலை வழக்கம் போல், செங்கோட்டை அருகே சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த நேரத்தில், சிக்னலில் நின்று கொண்டிருந்த Hyundai i20 இரக கார் ஒன்று வெடித்துச் சிதறியது.
இதில் அதன் அருகே நின்று கொண்டிருந்த சில கார்களும் தீப்பற்றியதோடு, கிட்டத்தட்ட 150 மீட்டருக்குத் தூக்கி வீசப்பட்டன.
இச்சம்பவம் தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து, டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ரயில், பேருந்து, விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தளங்களில் உடனடியாக பாதுகாப்புச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.








