Oct 18, 2025
Thisaigal NewsYouTube
"காசு இல்லைங்க.." வேறு வழியில்லாமல் விமான நிலையங்களை வாடைக்கு விடும் பாகிஸ்தான்! கஷ்டம்தான்
உலகச் செய்திகள்

"காசு இல்லைங்க.." வேறு வழியில்லாமல் விமான நிலையங்களை வாடைக்கு விடும் பாகிஸ்தான்! கஷ்டம்தான்

Share:

பாகிஸ்தான் நாட்டில் அந்நிய செலாவணி மிக மோசமாக இருக்கும் சூழலில், நிலைமையைச் சமாளிக்க ஏர்போர்ட்களை அவுட்சோர்ஸிங் செய்ய பாக். அரசு முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் இப்போது கடுமையான பொருளாதார சிக்கலில் தவிர்த்தது வருகிறது. பல ஆண்டுகளாக இந்த சிக்கல் இருந்தாலும் கடந்த சில மாதங்களில் நிலைமை ரொம்பவே மோசமடைந்தது.

சில மாதங்களுக்கு முன்பு பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பாகிஸ்தானைப் புரட்டிப் போட்டது. இதனால் நிலைமையைச் சமாளிக்க அவர்கள் சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், ஏன் சர்வதேச நாணய நிதியம் ஆகியோரிடம் பல பில்லியன் டாலர் கடன் வாங்கினர்.

இருப்பினும், நிலைமை சரியாகவில்லை. பெட்ரோல், கோதுமை என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. அங்கே அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதையடுத்து நிலைமையைச் சமாளிக்க அங்குள்ள முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகளை அவுட்சோர்சிங் செய்யப் பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் அவுட்சோர்சிங்கிற்கு விட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. முதற்கட்டமாக இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தை அவுட்சோர்சிங் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்கப் பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அவுட்சோர்ஸிங் செய்யப்படுவது என்பது வழக்கமான நடைமுறை தான். ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் விமான நிலையங்கள் அவுட் சோஸ்சிங் தான் செய்யப்பட்டிருக்கும். ஆனால், பாகிஸ்தானில் இத்தனை காலம் பாதுகாப்பைக் காரணமாகச் சொல்லி அரசே முழுமையாக ஏர்போர்ட்களை கன்டிரோல் செய்து வந்தது. இப்போது நிதிநிலை மோசமாகி இருப்பதால் அந்நிய செலாவணி தேவை என்பதாலேயே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News