Oct 19, 2025
Thisaigal NewsYouTube
90 ஆயிரம் வீரர்களை வரச்சொன்ன அமெரிக்கா! நடுங்க வைக்கும் நேட்டோ படைகள்.. தொடங்குகிறது 3ம் உலகப்போர்?
உலகச் செய்திகள்

90 ஆயிரம் வீரர்களை வரச்சொன்ன அமெரிக்கா! நடுங்க வைக்கும் நேட்டோ படைகள்.. தொடங்குகிறது 3ம் உலகப்போர்?

Share:

சென்னை: உக்ரைன் - ரஷ்ய போர் ஒரு பக்கம் தீவிரமாக நிற்காமல் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தொடங்கிவிட்டது. இதற்கு இடையில் ஈரான் - பாகிஸ்தான் மோதல், வடகொரியா தென்கொரியா மோதல், ஹவுதி - மேற்கு உலக நாடுகள் மோதல் தீவிரம் அடைந்து உள்ளன.

இந்த மோதல்கள் கண்டிப்பாக நீண்ட கால போராக இருக்கும்.. நீண்ட கால போராக இது மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக தற்போது நேட்டோ படைகளை ஒருங்கிணைத்து சுமார் 90000 வீரர்களை வைத்து அமெரிக்கா பயிற்சி எடுக்கிறது. பனிப்போருக்கு பின்பாக முதல்முறை இத்தனை வீரர்களை வைத்து அமெரிக்கா பயிற்சி மேற்கொள்கிறது.

ரஷ்யா போர்; அமெரிக்கா - ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்கு பின்பாக மிக மிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உக்ரைன். உக்ரைன் நேட்டோ படையில் இணைய விரும்பியது. இதற்காக முயற்சிகளை செய்தது.

சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் - உக்ரைனும் ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. இப்படிப்பட்ட நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு ஆபத்து. ஏற்கனவே ரஷ்யாவை சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்துவிட்டது. இதில் உக்ரைனும் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு பெரிய சிக்கலாகும். பாதுகாப்பு ரீதியாக ரஷ்யாவிற்கு நேட்டோ வைக்கும் செக்காக இது அமைந்துவிடும். இதன் காரணமாக தற்போது உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடந்து வருகிறது.

Related News