பாலி, ஜூலை.11
மலேசியாவில் வாடிக்கையாளர்களின் பேராதரவுடனும், பாராட்டுகளுடனும் வெற்றி நடைப் போட்டு வரும் பாத்தாங் காலி பேம்பூ பிரியாணி உணவகம், தற்போது இந்தோனேசியா, பாலியில் தனது பேம்பூ பிரியாணி உணவகத்தைத் திறந்துள்ளது.
சுற்றுப் பயணிகளின் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலமான பாலியில் திறக்கப்பட்டுள்ள முதலாவது பேம்பூ பிரியாணி உணவகம் இதுவாகும்.
பத்தாங் காலி, கோலாலம்பூர் ஆகியவற்றுக்கு அடுத்து பத்தாங் காலி பேம்பூ பிரியாணி நிர்வாகத்தினரின் மூன்றாவது கிளையாக பாலி, பத்தாங் காலி பேம்பூ பிரியாணி உணவகம் விளங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள் அதிகமாக வருகை புரியும் பாலி, கூட்டா பீச்சிலிருந்து 8 நிமிடத்தில் பாலி, பத்தாங் காலி பேம்பூ பிரியாணி உணவகத்தைச் சென்றடைந்து விடலாம் என்கின்றனர் பத்தாங் காலி பேம்பூ பிரியாணி நிர்வாகத்தைச் சேர்ந்த சௌமியா பெரேரா மற்றும் யோமால் ஒஷாடி.
மலேசிய சுற்றுப் பயணிகள் அதிகளவில் பாலிக்கு வருகை புரிகின்றனர். மலேசியாவில் உள்ள சுற்றுலாப் பயண நிறுவனங்களின் ஆதரவின் மூலம் பாலி, பத்தாங் காலி பேம்பூ பிரியாணி உணவகத்திற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே சுவை, அதே தரம், அதே நம்பகத்தன்மையுடன் பாலி, பத்தாங் காலி பேம்பூ பிரியாணி, மணம் மாறாத தரத்துடன் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அச்சம் தேவையில்லை.
தங்களின் இந்த வெற்றிக்கு பக்க பலமாக இருந்து வரும் மலேசிய வாடிக்கையாளர்களை, பத்தாங் காலி பேம்பூ பிரியாணி உணவகம் என்றுமே மறந்ததில்லை. அவர்களுக்கு இவ்வேளையில் மானசீகமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்று சௌமியா பெரேராவும் யோமால் ஒஷாடியும் குறிப்பிட்டனர்.
நம்பகத்தன்மை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் மற்றும் மலேசிய சுற்றுலாப் பயண நிறுவனங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு கொள்வதற்கான சூழலை பாலி, பத்தாங் காலி பேம்பூ பிரியாணி உணவகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட ஆர்வமுள்ள பயண நிறுவனங்கள் தொடர்பு கொள்ளலாம்.
பாலிக்கு வருகின்ற சுற்றுப் பயணிகள், இந்திய உணவு வகைகளுக்கு பாலி, கூட்டா பீச்சிலிருந்து உங்கள் கைக்கு எட்டியத் தூரத்திலேயே உள்ளது பாலி, பத்தாங் காலி பேம்பூ பிரியாணி உணவகம்.
உணவகம் செயல்படும் நேரம் பிற்பகல் 3.01 மணி முதல் இரவு 11.01 மணி வரை:
தொடர்புக்கு :
Bali Batang Kali Bamboo Briyani
Jl.Majapahit NO26,Gang Bambu Kecamatan Kuta
+62 822-2753-7258








