கொச்சி, செப்டம்பர்.06-
கொச்சியில் இருந்து அபுதாபி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் 180 பேர் கடும் அவதியுற்றனர். விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அறிந்த விமானி பத்திரமாக தரையிறக்க முயற்சி செய்தார். அவர் கொச்சி விமான நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.
எனவே விமானம் கொச்சி விமான நிலையத்திற்கே பாதுகாப்பாகத் திரும்பியது. பயணிகள் மற்றொரு விமானத்தில் அபுதாபிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அண்மைய காலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.