Aug 27, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியா: திடீர் வெள்ளத்தில் 11 பேர் உயிரிழந்தனர்
உலகச் செய்திகள்

இந்தோனேசியா: திடீர் வெள்ளத்தில் 11 பேர் உயிரிழந்தனர்

Share:

ஜகார்த்தா, செப்டம்பர்.11-

இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் மழை வெள்ளத்தில் சிக்கி, 11 பேர் பலியாகினர். 13 பேரைக் காணவில்லை.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு நுசா தெங்காரா மற்றும் பாலி தீவுகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதில் நுசா தெங்கரா பகுதியில் ஒரு வீடு அடித்துச் செல்லப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர, ஐந்து பேரைக் காணவில்லை.

பாலியில், எட்டு சடலங்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். அதே நேரத்தில், எட்டு பேரைக் காணவில்லை.

Related News