Nov 18, 2025
Thisaigal NewsYouTube
ஜப்பானில் எரிமலை நெருப்பு பிழம்புடன் சீற்றம்: விமானச் சேவைகள் ரத்து
உலகச் செய்திகள்

ஜப்பானில் எரிமலை நெருப்பு பிழம்புடன் சீற்றம்: விமானச் சேவைகள் ரத்து

Share:

தோக்யோ, நவம்பர்.17-

ஜப்பானில் 13 மாதங்களாக அமைதியாக இருந்த எரிமலை குமுறியதால் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

ஜப்பான் எரிமலைகள் அதிகம் காணப்படும் நாடாகும். இங்கு எப்போது எரிமலை விழித்து, நெருப்புப் பிழம்புகளை உமிழத் தொடங்கும் என்று தெரியாது. இந்நிலையில் 13 மாதங்களாக அமைதியாக இருந்த சகுராஜிமா என்ற எரிமலை இப்போது நெருப்பை உமிழத் தொடங்கி இருக்கிறது. இந்த எரிமலை ககோஷிமா நகரத்தின் அருகில் உள்ளது.

அடுத்தடுத்து 2 முறை நெருப்புப் பிழம்புகளை உமிழ்ந்ததால் வானில் கிட்டத்தட்ட 4.4 கிலோமீட்டர் தூரம் புகை மண்டலமாகவும், புழுதியாகவும் காட்சியளித்தது. இது அந்நாட்டின் விமானச் சேவையை முற்றிலும் பாதித்துள்ளது.

வான்வழி பாதையில் புகை, சாம்பல்கள் நிரம்பி காணப்பட்டதால் ககோஷிமா விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 30க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நகரங்களுக்குச் செல்ல வேண்டிய விமானங்களின் வருகை, புறப்பாடுகளும் தாமதமாகியிருக்கின்றன.

சகுராஜிமா எரிமலை ஜப்பானின் பிரபலமான எரிமலையாகும். 2019ம் ஆண்டு நெருப்பு பிழம்புகளை உமிழ்ந்த போது, வானில் 5.5 கிமீ புகை மண்டலமாகவும், தூசுகள் நிரம்பி காணப்பட்டது.

Related News