வியட்னாம், நவம்பர்.08-
பிலிப்பைன்சைச் சின்னாபின்னாமாக்கிய, 'கல்மேகி' புயல், அண்டை நாடான வியட்நாமையும் தாக்கியதில், ஐந்து பேர் பலியாகினர்.
தாய்லாந்து வளைகுடாவில் உருவான கல்மேகி புயல், தென்கிழக்கு ஆசியா முழுதும் பெரும் பாதிப்பையும், உயிர்ச் சேதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் பிலிப்பைன்சைத் தாக்கிய இந்த புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, அந்நாட்டில் 188க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 135 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதையடுத்து, புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை அந்நாடு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது.








