குவஹாத்தி, டிசம்பர்.20-
அசாம் மாநிலத்தில் ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் காம்பூர் பகுதியில் ராஜஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 காட்டு யானைகள் உயிரிழந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு குட்டி யானை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
யானைகள் கூட்டத்தை கவனித்த ரயில் பைலட் அவசரமாக நிறுத்த முயற்சித்தார். இருப்பினும் யானைகள் மீது ரயில் மோதி விட்டது. எனினும் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. பின்னர் தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள், மற்ற பெட்டிகளில் உள்ள காலியாக இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
பின்னர் தடம் புரண்ட பெட்டிகளை அப்புறப்படுத்திய பிறகு ரயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் நிகழ்ந்த பகுதி வழியாக செல்ல திட்டமிடப்பட்ட ரயில்கள் வேறொரு பாதை வழியாக இயக்கப்படுகின்றன. மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.








