Oct 20, 2025
Thisaigal NewsYouTube
மகனுக்கு பெயர் வைத்த குஷியில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விசிட் அடித்த சிவகார்த்திகேயன்!
உலகச் செய்திகள்

மகனுக்கு பெயர் வைத்த குஷியில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விசிட் அடித்த சிவகார்த்திகேயன்!

Share:

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் தங்கள் மகனுக்கு பவன் சிவகார்த்திகேயன் என்று பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர். முதல் மகள் பெயர் ஆராதனா. இரண்டாவது குழந்தை மகன் குகன். இந்த நிலையில் 3வது குழந்தைக்கு பவன் சிவகார்த்திகேயன் என்று பெயர் சூட்டியுள்ளனர். இதுதொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் கடைசியாக 'அயலான்' படத்தில் நடித்தார். இது ஜனவரியில் வெளியானது. சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது வரவிருக்கும் திரைப்படமான 'அமரன்' வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இப்படம் செப்டம்பரில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.

இதற்கிடையில், சிவகார்த்திகேயன் இப்போது ஏ.ஆர் முருகதாஸின் படப்பிடிப்பில் இருக்கிறார், அதற்கு தற்காலிகமாக 'எஸ்கே 23' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related News