Jan 16, 2026
Thisaigal NewsYouTube
நியூயார்க் பூங்காவில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் மரணம், அறுவர் காயம்
உலகச் செய்திகள்

நியூயார்க் பூங்காவில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் மரணம், அறுவர் காயம்

Share:

நியூயார்க், ஜூலை 29-

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

தாக்குதல் காரணமாக ஆறு பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

உயிருக்குப் பயந்து சம்பவ இடத்திலிருந்து பலர் தப்பி ஓடியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

இந்தச் சம்பவம் மேப்பல்வுட் பார்க்கில் அமெரிக்க நேரப்படி ஜூலை 28ஆம் தேதி மாலை 6.20 மணி அளவில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குண்டடி பட்டு மாண்டவருக்கு 20 வயது என்று நியூயார்க் காவல்துறை கூறியது.

அவரது அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மற்ற ஐந்து பேருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர்.

காயமடைந்தோர் தனியார் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை கூறியது.

தாக்குதல் நடத்தியோர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று அறியப்படுகிறது

Related News