Oct 20, 2025
Thisaigal NewsYouTube
ஓமான் கனமழை வெள்ளம்
உலகச் செய்திகள்

ஓமான் கனமழை வெள்ளம்

Share:

ஓமான், ஏப்ரல் 15-

ஓமான் நாட்டில் பெய்து வரும் கனமழை வெள்ளத்தில் சிக்கி கேரளாவை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்

ஓமான் நாட்டில் பெய்து வரும் கனமழை வெள்ளம் காரணமாக 3 குழந்தைகள் உள்பட கேரளாவை சேர்ந்த 12 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓமன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 12 பேர் வந்த வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், ஓமானின் வடக்கு அல் ஷர்கியா பகுதியில் மாயமான ஐந்து பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஓமான் நாட்டில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஓமானின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஓமான் கனமழை காரணமாக மஸ்கட், வடக்கு ஷர்கியா, தெற்கு ஷர்கியா, அட்-டகிலியா, அத்-தாஹிரா மற்றும் தெற்கு அல் பதினா மாகாணங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்குமாறு அந்நாட்டு கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஓமான் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related News