ஒட்டாவா: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இப்போது இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் கனடா நாட்டிற்கும் இடையே நல்லுறவே நீண்ட காலமாக இருந்தது. இரு நாடுகளும் தடையற்ற வர்த்தக உறவில் ஈடுபடுவது குறித்தும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்தச் சூழலில் தான் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் கனடா நாட்டை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் கொடூரமாகச் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவர் அங்கே காலிஸ்தான் டைகர் போர்ஸ் என்ற அமைப்பை நடத்தி வந்தார்.
இதற்கிடையே இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில முக்கிய விளக்கங்களைக் கொடுத்துள்ளார். இந்தியாவைத் தூண்டிவிடக் கனடா முயலவில்லை என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கம் கொடுத்துள்ளார்.