Oct 20, 2025
Thisaigal NewsYouTube
அமெரிக்காவின் டெக்சஸில் கடும் காட்டுத்தீ - ஒருவர் பலி
உலகச் செய்திகள்

அமெரிக்காவின் டெக்சஸில் கடும் காட்டுத்தீ - ஒருவர் பலி

Share:

அமெரிக்கா, மார்ச் 1 -

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் பரவும் காட்டுத்தீக்கு ஒருவர் பலியானார்.சுமார் 600,000 காற்பந்துத் திடல்களுக்கு ஈடான பகுதி தீப்பற்றிக் கொண்டதாய்த் தெரிவிக்கப்பட்டது.

டெக்சஸில் இதுவரை இல்லாத அளவு ஏற்பட்டிருக்கும் கடும் காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவரத் தீயணைப்பாளர்கள் போராடுவதாகக் கூறினர்.அனல்காற்றாலும் கடும் வெப்பத்தாலும் 5 பகுதிகளில் பெரிய அளவில் தீ கொழுந்துவிட்டு எரிவதாய் அதிகாரிகள் கூறினர்.

இன்று பின்னேரத்தில் வெப்பநிலை குறையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. அது காட்டுத் தீயின் தீவிரத்தைத் தணிக்கும் என்று நம்பப்படுகிறது.

Related News