Oct 20, 2025
Thisaigal NewsYouTube
கோவிட் 19 தடுப்பூசியை ஆஸ்ட்ராஜெனகா ஏன் திரும்பப் பெற்றது?
உலகச் செய்திகள்

கோவிட் 19 தடுப்பூசியை ஆஸ்ட்ராஜெனகா ஏன் திரும்பப் பெற்றது?

Share:

இந்தியா, மே 08-

தனது கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கள் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசி, அரிதான மற்றும் ஆபத்தான பக்க விளைவை ஏற்படுத்தும் என்று அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் சமீபத்தில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. இந்த விவகாரம் உலகளவில் விவாதப் பொருளாக மாறியது. இந்த நிலையில் தனது கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வணிக காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இனி தடுப்பூசியை தயாரிக்கப்படமாட்டாது எனவும், வழங்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளது. எனினும் இந்த தடுப்பூசி போடுவதால் TTS - த்ரோம்போசிஸ் த்ரோம்போசைட்டோபீனியா என்ற நோயை ஏற்படுத்தும் என்பதை அந்நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஒ0

அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தானாக முன்வந்து அதன் "சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தை" திரும்பப் பெற்றதால், தடுப்பூசி இனி ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்த அங்கீகரிக்கப்படாது. இந்த தடுப்பூசியை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பம் மார்ச் 5 அன்று சமர்ப்பிக்கப்பட்டு செவ்வாய்கிழமை அமலுக்கு வந்தது.

வாக்ஸெவ்ரியா எனப்படும் தடுப்பூசிக்கு முன்னர் ஒப்புதல் அளித்த இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளிலும் இதே போன்ற திரும்பப் பெற விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும்.

அஸ்ட்ராஜெனகாவின் ரத்த உறைவு மற்றும் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை குறைப்பை ஏற்படுத்தும் என்ற பக்க விளைவு காரணமாக Vaxzevria தடுப்பூசி உலகளாவிய ஆய்வுக்கு உட்பட்டது. பிப்ரவரியில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி "மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், TTS நோயை ஏற்படுத்தும்" என்று ஒப்புக்கொண்டது.

இங்கிலாந்தில் சுமார் 81 பேர் இந்த TTS நோயால் இறந்ததாக கூறப்படுகிறது.இந்த தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனகாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்

"உலகளாவிய தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதில் வக்ஸ்செவ்ரியா ஆற்றிய பங்கைப் பற்றி நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு பெருமிதம் கொள்கிறோம். தடுப்பூசி பயன்பாட்டின் முதல் ஆண்டில் மட்டும் 6.5 மில்லியனுக்கும் அதிகமான உயிர்கள் காப்பாற்றப்பட்டன மற்றும் உலகளவில் மூன்று பில்லியனுக்கும் அதிகமான அளவுகள் வழங்கப்பட்டன. எங்களின் முயற்சிகள் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, மேலும் உலகளாவிய தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கிய அங்கமாக பரவலாகக் கருதப்படுகிறது," அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதனிடையே கடந்த ஆண்டு கோவிட்-19 தடுப்பூசி விற்பனை குறைந்ததால், வளர்ச்சி மந்தமடைந்த பிறகு, கடந்த ஆண்டு பல ஒப்பந்தங்கள் மூலம் சுவாச ஒத்திசைவு வைரஸ் தடுப்பூசிகள் மற்றும் உடல் பருமன் மருந்துகளை தயாரிக்க தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News